‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்...