Shadow

Tag: Kanguva thirai vimarsanam

கங்குவா விமர்சனம்

கங்குவா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தந்தைக்கும் மகனுக்குமான ஜென்மாந்திர பந்தத்தைப் பேசுகிறது படம். நவீன ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் ஜீடோ எனும் சிறுவன், ஃபிரான்சிஸ் தியோடரிடம் அடைக்கலம் புகுகிறான். இது 2024 இல். பெருமாச்சியின் வீரனும் இளவரசனுமான கங்குவா, பெருமாச்சிக்குத் துரோகம் செய்யும் கொடுவாவின் மகனைத் தத்தெடுத்துக் காப்பதாக வாக்களிக்கிறார். அடைக்கலம் புகுந்தவனை ஃபிரான்சிஸ் காப்பாற்றுகிறாரா, கொடுவாவின் மகனைக் கங்குவா காப்பாற்றுகிறாரா என இரண்டு கதைகள் இணையாகப் பயணிக்கிறது. பெருமாச்சி, அரத்தி, முக்காடு, வெண்காடு, மண்டையாறு என ஐந்து தீவுகள் பாரதத் தேசத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்றன. பாரதத் தேசத்தைப் பிடிக்க, 25000 வீரர்களோடு அரசர் அரிலியஸின் ரோமானியக் கப்பற்படை வருகிறது. போருக்கு முன், பயிற்சி எடுக்க நிலம் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் கதை சரி. சிலுவைப் போர் தொடங்குவதற்கு முன்னான ஆரம்பகட்ட பூசல்கள் நிக...