Shadow

Tag: Kannan Ravi Group

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும். அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, அவரைப் போஷித்து, ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறார் நிலச்சுவன்தாரான மன்றாடியார் எனும் பொள்ளாச்சி கோடீஸ்வரர். அவரது எண்ணம் போலவே குல்கந்த் குமார் வளர்ந்து தமிழகத்தின் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். குல்கந்த் குமாரின் 50 ஆவது வயதில் அவரை அரசியலுக்குள் கொண்டு வருகிறார் மன்றாடியார். அதன் பின் என்னாகி...
TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம்

TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” ஆகும். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாபாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தைத் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ்த் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வ...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போனது...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்தப்...