Shadow

Tag: Kanne Kalaimaane movie

“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி

“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி

சினிமா, திரைச் செய்தி
'கண்ணே கலைமானே' படத்தின் பத்திரிகயாளர் சந்திப்பில், "தர்மதுரைக்கு பிறகும் ஒரு நல்ல கதையைச் சொல்லி என்னால் யாரையும் ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா சப்பாணியாகப் பார்க்கப்பட்டேன். தர்மதுரை அவ்வளவு வெற்றி பெற்றும் எனக்கு இந்த நிலைமை. விஜய் சேதுபதி திரும்பி வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் வரை எனக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களால் உடனடியாகப் படப்பிடிப்பைத் துவங்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் வேறு கதைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது. பின்னர் நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தை ஏற்றுக் கொண்டதற்காக உதயநிதி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகர், ஒரு 10 யதார்த்தமான படங்களில் அவர் நட...
“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்

“கமலகண்ணனாகிய நான்..” – கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
"இதற்கு முன்பு, என் பல படங்களின் பல பத்திரிகையாளர் சந்திப்பில், 'இது ஒரு நல்ல படம்' என மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லியிருக்கேன். ஆனால் இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவருக்கும் நான் நன்றியைக் கூறுகிறேன். ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர், கலை இயக்கநர் என ஒவ்வொருவரும் மிகச் சிறந்த விஷயங்களை அளித்திருக்கிறார்கள். என் குழந்தை பருவ தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்திருக்கிறார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறை சீனு ராமசாமி சார் படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் பெண்களைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதாபாத்திரத...
கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

சினிமா, திரைச் செய்தி
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே, ஃபிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். "45 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். சீனு ராமசாமி சாரின் படங்கள் எப்போதுமே தனித்துவமான இடங்களின் பின்னணியைக்கொண்டிருக்கும். கண்ணே கலைமானே பசுமையான பின்னணியையும், மேலும் படம் முழுவதும் அழகான தருணங்களையும் கொண்டிருக்கும். எனக்குப் பயமாக இருந்தபோதெல்லாம், சீனு ராமசாமி சார் அவரது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் இருந்தே நான் யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தில் மிகப்பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்"...
மனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா

மனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா

சினிமா, திரைச் செய்தி
'கண்ணே கலைமானே' படத்தினைப் பற்றி நடிகை தமன்னா, "ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்தப் படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இன்று காலை (17-02-2019) வேறு ஒரு புதிய படத்தைப்  பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்தப் படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்தப் படத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. பொதுவாக, 'நாம் ஒன்றாக வேலை செய்யலாமா?' என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உதயநிதி ஸ்டாலினிடம் அடுத்தடுத்த படங்களில் என்னைப் பரிசீலனை செய்யுங்கள் எனக் கோரிக்கை வைக்கிறேன். ஏனெனில் இன்னும் பாரதியும் கமலகண்ணனும் ...
கண்ணே கலைமானே  – மனித உறவுகளைப் பற்றிய படம்

கண்ணே கலைமானே – மனித உறவுகளைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. நடிகரும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்தப் படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியைத்தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நேட்டிவிட்டி திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் தனது தனித்துவமான கதைக்களத்தால் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மைக் கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது" என்றார். மேலும் அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், சீனு ராமசாம...