
கவலை வேண்டாம் விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே!
ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.
தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...