Shadow

Tag: Kavin – Sakshi

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ்
'வண்டியிலே நெல்லு வரும்' பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவ...