Shadow

Tag: Keetha Kailasam

ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை விவர...
கட்டில் விமர்சனம்

கட்டில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மூன்று தலைமுறையாக வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காமார். நாயகன் தன் தாய், தன் மனைவி மற்றும் மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். நாயகனும் அவன் மனைவியும், நாயகனின் தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே “கட்டில்” திரைப்படம். ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெர...