Shadow

Tag: Kudumbasthan movie

குடும்பஸ்தன் விமர்சனம்

குடும்பஸ்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்' என்றும், 'அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல' என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது இலக்கு. அப்பா ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தனது பழைய வீட்டைச் சீர் செய்ய வேண்டும் என்பது இலக்கு. அம்மாவிற்கோ 50 ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் ஆன்மிக டூர் போக வேண்டும் என்பது இலக்கு. இத்தனை பேர்களின் இலக்குகளுக்கும் நமது ஹீரோ மணிகண்டனே பொறுப்பு. தனது அக்கா கணவர் குரு சோமசுந்தரத்தின் ஈகோ முன் தடுமாறிடக்கூடாது ...