Shadow

Tag: Kuttram 23

குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயை...
குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

சினிமா, திரைத் துளி
"ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக்களமமும், அந்தக் கதைக்களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதன் படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் குற்றம் 23 படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாதமாக வர, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். சமீபத்தில் குற்றம் 23 படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னைப் பாராட்டிய போது மிக உற்சாகமாக இருந்தது. குற்றம் 23 படத்தின் ஆரம்ப கட்ட...
க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

சினிமா, திரைத் துளி
பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான்  திசினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  'குற்றம் 23' படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையி...
ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

சினிமா, திரைத் துளி
‘குற்றம் 23’ திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. படத்தில் அவரது கதாபாத்திரம் பெயர் தென்றல். 'மெளன ராகம்' திவ்யா, 'வேட்டையாடு விளையாடு' ஆராதனா, 'காக்க காக்க' மாயா, 'அலைபாயுதே' சக்தி போல மகிமா ஏற்று நடிக்கும் தென்றல் பாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்குமென அடித்துச் சொல்கின்றனர் படக்குழுவினர். "முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்கப் போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரின் சுமுகமான பண்பும், நட்பு ரீதியாகப...