
Light shop (2024) – Korean, JioHotstar
தமிழ்நாட்டை விட சின்ன நிலப்பரப்பும், குறைவான மக்கள்தொகையும் கொண்ட தென்கொரியா, அதன் படைப்பாக்கத்தில் உலகை ஆள்கிறது. கொரியத் திரைப்படங்கள், இணைய தொடர்கள் ஹாலிவுட்டுக்கு இணையான புகழ்பெற்றவை. பல கொரியத் திரைப்படங்கள் தரத்தில், புதுமையான கதைக்களத்தில் ஹாலிவுட்டையே மிஞ்சி நிற்பவை. அப்படி ஒரு இணைய தொடர் தான் லைட் ஷாப். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் மிகவும் சிக்கலான கதைக்களத்தைக் கொண்டது. நான்-லீனியர் திரைக்கதை மேலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால் நிச்சயம் மிகச் சிறப்பான, நிறைவான அனுபவத்தை வழங்கும். இந்தத் தொடரின் தாக்கம், பார்த்து முடித்த பல நாட்களுக்கு நீடிக்கும். அவ்வளவு கனம் மிகுந்த தொடர்.
கொரியர்கள் எந்த வகை ஜானர் படமென்றாலும் அதில் எமோஷனை, சென்ட்டிமென்ட்டைக் கலந்து விடுவார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் நம்மை அழக் கூட வைத்துவிடுவார்கள். அது அவர்...