லோகன் விமர்சனம்
17 வருடங்களாக 9 படங்களில் வுல்வெரினாக மக்கள் மனதில் பதிந்த ஹ்யூ ஜாக்மேன், லோகன் படத்தோடு அப்பாத்திரத்தில் நடிப்பதற்கு குட் பை சொல்கிறார் ஹ்யூ ஜாக்மேன். அதற்கு ஏற்றாற்போல், ஹ்யூ ஜாக்மேனிற்கு மிகக் கச்சிதமானதொரு ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் மேங்கோல்ட்.
மரணத்திற்காகக் காத்திருக்கும் லோகன், தன் நண்பர்களுக்காக ஒரு படகு வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார். ஆனால், லாரா எனும் மியூடன்ட் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் விருப்பமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லோகன். யாரந்த சிறுமி? பலஹீனமான லோகன் எடுத்துக் கொண்ட கடமையை வலிமையான எதிரிகளை மீறி நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.
மனிதர்களைத் துன்புறுத்தி விடவே கூடாதெனக் கவனமாக இருக்கிறார் லோகன். ஆனால், படத்தின் தொடக்கமே வுல்வெரினின் உலோக நகங்கள் ரத்தத்தில் நனைகிறது. படம் நெடுகேவும் அதே கதைதான். வுல்வெரினின் நகங்கள் மனிதர்களின் முகங்களை, மேலிருந...