பிக் பாஸ் 3 – நாள் 31
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும்.
லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்...