மாமன்னன் விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ...