மாவீரன் விமர்சனம்
மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன்.
ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ எ...