Shadow

Tag: Maayon review in Tamil

மாயோன் விமர்சனம்

மாயோன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர் உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம். - நகரப்படலம், பாலகாண்டம், கம்ப ராமாயணம் மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. அவர், முல்லை நிலக்கடவுள் என பண்டைய தமிழர்களால் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மாயோன் மலையிலுள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோயிலின் தொன்மத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பாவைக் கூத்தாகவும், அனிமேஷன் உதவியாலும், அக்கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் நம்பிக்கையையும் அழகாகக் கதையின் களமாக அமைத்துள்ளனர். இவையே தனிக்கதையாக ரசிக்கத்தக்கும் அளவு, இளையாராஜாவின் இசையோடு கை கோர்த்து ஓர் அடர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. தொன்மத்திலுள்ள அழகியல், மையக் கதையான ரகசிய அறை பொக்கிஷம், களவாட நினைக்கும் இத்தாலிய வில்லன் என்பதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கிவிடுகிறது. தொன்மத்தைத் திரையில் கடத்த தோல...