
50வது நாளில் மகான் – நெகிழ்ச்சியில் விக்ரம்
‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது. ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்.'
- காந்தி மகான்.வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியைத் தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படம் என்று நினைக்கும்போது, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
சோஷியல் மீடியாவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானைக் கொண்டாடிய அனைவரின் அன்பையும் ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது. இதை என்றும் அன்புடனும் பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.
அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானைக் கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜ...