Shadow

மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சீயான் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளின் கதைத் தொகுப்பாகும். தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ வாழ்க்கை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தக் கதை.

இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், “ப்ரைம் வீடியோவில் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

“மகான் திரைப்படத்தை, ப்ரைம் வீடியோவில் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் மகான் திரைப்படத்தின் பிரத்தியேக உலகளாவிய ப்ரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.