
மகா அவதார் நரசிம்மா விமர்சனம் | Mahavatar Narasimha review
அழகான பிரகலாதன். அவரை மிக அழகாக வடிவமைத்து, பார்வையாளர்களைக் கொள்ளை கொள்ளுமளவு சிறப்பாக அனிமேட் செய்துள்ளனர். தமிழ் டப்பிங்கையும் மெனக்கெட்டு நேர்த்தியாகச் செய்துள்ளனர். பிரகலாதனது உறுதியான பக்தியும், கருணை பொழியும் வதனமும் காண்போரைக் வசீகரித்து விடுகிறது. விஷ்ணுவின் அவதாரம் பின்தங்கி, பக்த பிரகலாதன் வானளவு உயர்ந்து நிற்கிறார். 'அடியாரைப் போற்றுதல்' என்பதே வைணவத்தின் முக்கியமான அம்சம். அதைப் படம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது.
காஷ்யபரும் திதியும் கூடும் நேரத்தில் இருந்து படம் தொடங்குகிறது. ஹிந்துத் தொன்மத்தின் தொடக்கமே, ரிஷி காஷியபர் மற்றும் அவர் மணந்த தக்ஷனின் பதிமூன்று மகள்களிலிருந்தே விஸ்தாரனப்படுக்கிறது. திதியின் மகனான ஹிரண்யாக்ஷன், பூமாதேவியைக் கார்போதகக் கடலில் ஒளித்து வைத்துவிடுகிறார். விஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமாதேவியை மீட்கிறார். தன் தம்பியைக் கொன்ற வ...


