Shadow

Tag: Mahendra Film Factory

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்வையாளர்களை ஈர்க்கவும், அதன் மூலம் புகழ் பெறவும், எதையாவது கன்டென்ட்டாக்கி வீடியோ போட்டுத் தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்க நினைக்கும் யூட்யூபர், எக்ஸ், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைச் சாடியுள்ளார். ஒரு விஷயத்தின் உண்மை நிலையைப் பற்றி எதுவும் அறியாமலே ஒரு கருத்தை மிக வலுவாகப் பொதுச் சமூகத்தில் விதைத்து விட முடிகிறது இந்த சோஷியல் மீடியா செலிபிரட்டிகளால். அதனால் தவறே இழைக்காதவர்கள் வீண் பழி சுமக்க வேண்டி வருகிறது. இத்தகையவர்களைத் தேடிக் கொல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் முதலில் கொல்வது, பிளாக்மெயில் ஜர்னலிசம் செய்யும் சரக்கு சங்கர் என்பவரை. அந்த சைக்கோ கொலைகாரனிடம் யூட்யூபர்களான கர்ணாவும் ரேஷ்மாவும் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தப்பித்தார்களா, ஏன் அவனை சைக்கோ கொலைகாரன் கொல்லத் துடிக்கிறான் என்பதற்குப் பதிலுடன் நிறைவுறுகிறது படம். படத்தின் முதற்பாதியைச் சகித்துக் கொள்ள ஓர் அசாத்திய திடம்...
வாடா கருப்பா – குகையில் சிக்கிய படக்குழுவினர் | இரவின் விழிகள்

வாடா கருப்பா – குகையில் சிக்கிய படக்குழுவினர் | இரவின் விழிகள்

சினிமா, திரைத் துளி
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’ ஆகும். இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவைக் கவனிக்க, ‘விடுதலை’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப்...