Shadow

Tag: May 30 – World MS Day

உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

இது புதிது, மருத்துவம்
MSSI என்பது ‘மல்டிபிள் ஸ்க்ளிராசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (Multiple Sclerosis Society of India)’ -வைக் குறிக்கும். உடலின் பல்வேறு இடங்களில் திசுக்கள் கடினமாகி, தண்டுவட மரப்பு நோய் (MS) ஏற்படும். மூளை மற்றும் முதுகு தண்டுவடத்து திசுக்களை மூடியுள்ள காப்புப் பொருளான மையீலின் (Myelin) கடினமாவதால் ஏற்படும் வடுக்கள், மூளை நரம்பணுக்கள் மற்றும் முதுகுத்தண்டுக்கிடையே உள்ள தொடர்பினைத் துண்டித்து, நோயாளியை ஊனமாக்குகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆதலால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது, 14 முதல் 40 வயதுக்குள் உள்ளோரைத் தாக்குவதால், ‘இளைஞர்களை ஊனமாக்கும் நோய் (Crippler of the Young Adult)’ என்றும் அழைக்கப்படுகிறது. MS ஒரு நரம்பியல் சிதைவு ஒழுங்கின்மைக் கோளாறாகும். இது, மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் பார்வை நரம்புகளைப் பாதிக்கிறது. மேலும் பல நரம்பியல் க...