
பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’
மிக மிக அவசரம் - பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி,
“இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்...