32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கோனேரிப்பட்டி பாலத்தில்

Dinesh R சேலம் Published: 08/12/2016 2 நிமிட வாசிப்பு Updated: 12/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Miga miga avasaram

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு “பவுனு பவுனுதான்” படத்தின் படப்பிடிப்பு கோனேரிப்பட்டிப் பாலத்தில் நடந்தது. அப்பாலம் சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ளது. பாக்யராஜும் ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தற்போது, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, “மிக மிக அவசரம்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கோனேரிப்பட்டி பாலம் கதைக்குத் தேவைப்படுவதால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நீண்ட காலத்திற்குப் பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். ‘பவுனு பவுனுதான்’ படம் போலவே இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்திச் செல்கின்றனர்.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமான் நடிக்கிறார். கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷும், கதாநாயகியாக கங்காரு, வந்தா மல ஸ்ரீஜாவும் நடிக்கின்றனர். மேலும், வழக்கு எண் முத்துராமன், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ஆண்டவன் கட்டளை அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர், வெற்றிக்குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் கங்காரு, அமைதிப்படை 2 ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவை பாலபரணியும், படத்தொகுப்பை சுதர்சனும் மேற்கொள்கின்றனர்.

மேலும், முக்கிய அம்சமாகப் படப்பிடிப்புக்கு ‘எபிக் வெப்பன் ஹீலியம் 8கே சென்சார்’ என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்படுகிறது. இது 8கே ரெசல்யூஷன் அடங்கிய கேமிரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிகத் துல்லியமாக படம் பிடிக்கலாம். இந்தக் கேமிரா இந்தியாவிலேயே முதன்முறையாக ’மிக மிக அவசரம்’ படத்தில் தான் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.