Shadow

Tag: Mugundhan Unni Associates review in Tamil

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
முப்பது வயதிற்குள் தொழிலில் வெற்றியாளாரக மிளிர வேண்டுமென மிகவும் ஆர்க்னைஸ்டாக வாழ்கிறார் வக்கீல் முகுந்தன் உன்னி. வயது 36 ஆகிவிடுகிறது. தனக்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்த வேலையும் போய் விட, மருத்துவமனையில் சுலபமாகப் பெரும்பணம் சம்பாதிக்கும் வக்கீல் ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது. அது தான் நம்ம வழியும் என முகுந்தன் உன்னி எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் கதை. அறமாவாது, கர்மாவாவது, தொழிலில் கொழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதனைப் பற்றிய கதை. Wow, he is brutally cold and bloody calculative with no empathy. இப்படி, எல்லாச் சூழலிலும் முகுந்தனின் மைண்ட்-வாய்ஸ் எதையாவது, யாரையாவது எடை போட்டுக் கொண்டே உள்ளது. அப்படியான அவரது மைண்ட்-வாய்ஸ், படத்தின் முழு நீள டார்க் காமெடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது. தமிழகத்தில் 40 திரையரங்குகளில் வெளியிட விருப்பப்பட்டும் 14 திரையரங்குகள் தான் கிடை...