Shadow

Tag: Music director Vishnu Vijay

பிரேமலு விமர்சனம்

பிரேமலு விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜாலியாய் ஒரு படம் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டுமென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரேமலு மிக நல்ல தேர்வாக இருக்கும். கல்லூரிக் காதல் புட்டுக் கொள்ள, UK போக விசாவும் கிடைக்காமல் போக, ஊரை விட்டு எங்கேயாவது போனால் பரவாயில்லை என்று நண்பனுடன் GATE பயிற்சிக்காக ஹைதராபாத் செல்கிறான் சச்சின். ஹைதராபாத்தும் சலித்து, சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் இணையலாம் என யோசிக்கும் பொழுது IT-இல் பணிபுரியும் ரீனுவைப் பார்க்கின்றான். கண்டதும் காதலில் விழ, ரீனுவை இம்ப்ரஸ் செய்ய சச்சின், அவனது நண்வன் அமல் டேவிஸுடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் தான் படத்தின் கலகலப்பான கதை. இத்தனை மெலிதான ஒரு கருவை, மிகவும் ரசிக்கும்படியான திரைக்கதையாக எழுதி அசத்தியுள்ளனர் இயக்குநர் கிரிஷ் AD-உம், கிரண் ஜோஸும். ‘காதல்டா! ஒரு தடவ தான் வரும், ஒருத்தங்க மேல தான் வரும்’ என ஓவர் எமோஷ்னல் ஆகாமல், அதில் அன்றாட வாழ்வின்...