நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்
விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர விரும்பும் இளையராஜா ரசிகரான வெங்கட் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகரான ஆனந்தினை சந்திக்கிறார். ஆனந்த் தன் வாழ்க்கையைக் குறித்தும், நண்பர்களைக் குறித்தும் வெங்கட் பிரபுவிடம் பகிர்வதுதான் படத்தின் கதை.சின்னச் சின்ன ஆசை, குட்டிச்சுவர் ஏறி, கல்லூரிச் சாலை, தனிமை தனிமையோ, Take it ஊர்வசி, வான் இங்கே நீலம் அங்கே, எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த பாடலின் வரிகளை அத்தியாயங்களுக்கான உப தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். IV Trip - ஏலகிரி என நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு மட்டுமே இதில் விதிவிலக்கு. தலைப்பில் தான் தமிழ்த் திரைத்துறை சென்ட்டிமென்ட் பார்த்து ஒற்று தவிர்ப்பார்கள். இப்படத்தில் உப தலைப்புகளிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.ஆனந்த், ஆனந்தம் காலனியில் குடியேறி நண்பர்களைச் சம்பாதித்து மகிழ்ச்சியாகக் கல்லூரியை முடித்துவிடுகிறான். அதுவரை கல...