Shadow

Tag: Natty Nataraj

Infinity விமர்சனம்

Infinity விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இவர்கள் தான் குற்றவாளி என்று சிலரைச் சுட்டுக் கொல்கிறார். படம் முடிந்தது என்று நாம் நினைக்கும் போது, இவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு மாபெரும் வில்லன் வந்து ஆட்டம் இனி தான் தொடங்கப் போகிறது என்று உண்மையாகவே நம்மை மிரட்ட, INFINITY என்னும் தலைப்புக்கு ஏற்றார் போல் பாகம் 2 என்று போட்டு படத்தை...
குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார். ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓ...
யூகி விமர்சனம்

யூகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடி...