Shadow

Tag: Navvi Studios

வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களி...
மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் ...