
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...