NFIFWI – 66 வருட சாதனையும் கொண்டாட்டமும்
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) வளர்ச்சி அதிகாரிகளுடைய பிரிவின் சார்பாக NFIFWI (National Federation of Insurance Field Workers of India) – இன் 30 ஆவது கூட்டமைப்பு கவுன்சில் சந்திப்பு 2023 எனும் நிகழ்வு, இந்தியாவெங்கும் இருந்து வந்த சுமார் 4000 வளர்ச்சி அதிகாரிகள் பங்கு கொள்ள, சென்னை வர்த்தக மையத்தில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இந்த பிரம்மாண்டமான நிகழ்வை, மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கரத், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத், NFIFWI இன் அகில இந்தியத் தலைவர் திரு. வினய் பாபு, NFIFWI இன் பொது செயலாளர் திரு. விவேக் சிங் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பொழுது, எல்.ஐ.சி. -இன் மண்டல மேலாளர் திரு. G. வெங்கடரமணன், பிராந்திய மேலாளர் திரு. R. சந்தர் ஆகியோரும் உடன் இருந்...