Shadow

Tag: OPOS

கிச்சன் கில்லாடியான கதை

கிச்சன் கில்லாடியான கதை

சமூகம், மருத்துவம்
விறகு அடுப்பு, மண்ணெண்னை ஸ்டவ், ரம்பத்தூள் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் என அத்தனையும் பார்த்த ஒரே தலைமுறை என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான். அடுப்புகள் மாறியதால் சமைக்கும் நேரத்தோடு சமையலின் ருசியும் தரமும் குறைந்து போனதென்னவோ உண்மை. போதாத குறைக்கு உடனடி உணவுகள் என்கிற பெயரில் கெமிக்கல் குப்பைகள் நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. என்ன செய்வது? எல்லோருக்கும் அவசரம். நேரமின்மை. நாக்கிற்கு ருசியாக, மனதிற்கு இதமாக, உடலுக்கும் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான சமையல் என்பது வீட்டில் சமைத்தால்தான் உண்டு. நம்முடைய இந்திய உணவு வகைகள் எல்லாமே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள், பக்குவம், படிநிலைகள் எனச் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடியவை. இதை நினைத்தே பல பெண்கள் அயர்ச்சியாகி இன்ஸ்ட்ண்ட் உணவுகளை நாடுகின்றனர். வார இறுதியில் ஏதாவது ஒரு உணவகம் போய்ப் பிடித்...