ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்
ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம்.
ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன்.
படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார்.
சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி....