“வரலாறு அரசியல் சினமா | அதன் தாக்கங்கள்” – இயக்குநர் பா. ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித், ''சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?
நான் கலைக்கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாகப் புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலைக்கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். 'சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்', 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' , 'சினிமா பாரடைஸ்' இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.
நாம் சினிமாவை இயக்க...