Shadow

Tag: Padmavaat Movie Tamil Review

பத்மாவதி விமர்சனம்

பத்மாவதி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சஞ்சய் லீலா பன்சாலி பிரமாதப்படுத்தியுள்ளார். ராஜபுத்திரர்களைப் போல் வையகத்தில் வீரம் செறிந்தவர்கள் உண்டோ என்று தான் புகழ் பாடியுள்ளார். இதற்கு ஏன் இவ்வளவு அக்கப்போரும், அராஜக அலப்பறையும்? ஆண்ட பரம்பரை பெருமை பேசி, பள்ளி வாகணத்தைத் தாக்கிய ஸ்ரீ ராஜ்புட் கர்ணி சேணைக்குக் கடும் கண்டனங்கள்.  முத்துக்களைத் தேடிப் போகும் மேவாரின் மகாராஜா ராவல் ரத்தன் சிங், சிங்களத் தீவின் பேரழகி இளவரசி பத்மாவதியை திருமணம் புரிந்து கொண்டு சித்தூர் அழைத்து வருகிறார். பத்மாவதியின் அழகைக் கேள்விப்பட்டு போர் தொடுக்கிறார் அலாவுதீன் கில்ஜி. போரின் முடிவென்ன என்பதே படத்தின் கதை. 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் படத்தின் கதை, கண்டிப்பாகக் கவரும் வகையான வரலாற்றுக் காவியம் இல்லை. 15 ஆம் நூற்றாண்டில், சூஃபி கவிஞர் மாலிக் முஹம்மது ஜயாஸி எழுதிய ஒரு புனைவே இப்படத்திற்கான ஆதி மூலம். அசுவாரசியமான திரைக்கதையின் மெத்தனத்தைத் ப...