Shadow

Tag: Pani vizhum nilavu thirai vimarsanam

பனிவிழும் நிலவு விமர்சனம்

பனிவிழும் நிலவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை. ‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக். ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம். படத்தின் முதற்பாதியைத் தனது விபரீதக் கற்பனையால் ஓரளவு சுவாரசியப்படுத்துவது வெண்ணிறாடை மூர்த்தி என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது மீனா அக்காவாக வரும் கோவை சரளா. அவர் வந்த பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. அவரது கண்ணுக்கு மட்டும் தெரியும் அவரது கனவரது பெயர் கமல் என்கி...