மிஷன் இம்பாசிபிள்: ஆக்ஷன் ரெக்கோனிங்
உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கோனிங்' படம் ஜூலை 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்தியாவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. பாராமெளன்ட் பிக்சர்ஸ், ஸ்கைடான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து டாம் க்ரூஸும் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தொடர், 1996 இல் தொடங்கி, அதன் 7 ஆவது பாகம் தற்போது 2023 இல் வெளியாகவுள்ளது. 'டெட் ரெக்கோனிங்' என்பது நகரும் பொருளின் இருப்பிடத்தை (Position) கணக்கீடு செய்யும் முறையைக் குறிக்கும் பதமாகும். முக்கியமாகக் கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இப்படத்தின் கதை, ப்ரூஸ் கெல்லரின் தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் தொடர் படங்கள் எதுவுமே இதுவரை அக்ஷனில் ஏமாற்றியதில்லை. ட்ரெய்லரில் காண...