Shadow

Tag: Parole movie vimarsanam

பரோல் விமர்சனம்

பரோல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கான படம் எனத் தொடங்குகிறது பரோல். அண்ணன் கரிகாலன் கொலைகாரனாக இருந்தும், அவன் மீது மட்டும் அம்மா ஆராயி மிகவும் பாசமாக இருக்கிறார் என்ற மனக்குறையுடன் இருக்கிறான் தம்பி கோவலன். ஆளுநரைப் பார்த்து, தன் மகன் கரிகாலனின் விடுதலைக்குக் கருணை மனு அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஆராயி இறந்துவிடுகிறார். அண்ணனை வர வைக்காமல், அம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்துவிடலாமென நினைக்கிறான் கோவலன். கரிகாலனின் நண்பர்கள், பிணத்தை எடுக்க விட மாட்டோம் என பிரச்சனை செய்ய, வேறு வழியின்றி அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் கோவலன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என அறியப்படும் கரிகாலனை பரோலில் எடுப்பது மிகச் சவாலான காரியமாக உள்ளது. கரிகாலனுக்கு பரோல் கிடைப்பதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் கோவலன் எப்படிச் சமாளித்து அழைத்து வருகின்றான் என திரைக்கதை பயணிக்கிறது.&nbs...