Shadow

Tag: Passion Studios

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

சினிமா, திரைச் செய்தி
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தய...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்க...
“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

“நன்றி. ஜெய்ஹிந்த்!” – நிபுணன் அர்ஜூன்

சினிமா, திரைச் செய்தி
நிபுணன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உண்டென நன்றி தெரிவித்தது நிபுணன் படக்குழு. "நிபுணன் வரவேற்பிற்குக் காரணம் ஊடகத்தின் நேர்மையான விமர்சனமே! அதனுடன் மக்களின் கருத்தும் ஒன்றிப் போனது இந்தப் படத்தின் வெற்றிக்குப் மிக பெரிய அடித்தளமாகும்" என்றார் தயாரிப்பாளர் உமேஷ். “ நிபுணன் படம் 2015-இல் தொடங்கிய பின் இரண்டு வெள்ளங்களைப் பார்த்துவிட்டது. இந்தக் கதை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜூன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிகப் பெருமை. இந்தப் படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் இயக்குநர் அருண் வைத்யநாதன். மலையாளத்தில் தான் இயக்கிய பெருச்சாழி போல், தமிழில் ‘பொலிட்டிகல் சட்டையர்’ படமெடுக்க ஆவல் இருப்பினும், அப்படம் எடுத்தால்...
நிபுணன் விமர்சனம்

நிபுணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் 150வது படம். ரத்தத்தில் தோய்ந்த துணி உடுத்திய பொம்மை ஒன்று டி.எஸ்.பி. ரஞ்சித் காளிதாஸிற்கு வருகிறது. அதன் பின் தொடர் கொலைகள் நடக்கின்றன. யார் ஏன் எதற்குச் செய்கிறார் என்பதை ரஞ்சித் துப்புத் துலக்குவது தான் படத்தின் கதை. கலை இயக்குநர் ஆறுச்சாமியும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் தான் கேமிராவுக்குப் பின்னுள்ள படத்தின் உண்மையான ஹீரோக்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு கதகளி ஓவியம் ஒரு பக்கம் கோணலாகச் சாய்வதில் தொடங்குகிறது படம். படம் போரடிக்காமல் (bore) போக முக்கியமான காரணம் அதன் அசத்தலான விஷுவல்ஸ்களால் தான். கடைசியில் முகமூடியை அவிழ்க்கும் கதாபாத்திரத்தினைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் அருண் வைத்யநாதன். அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி என டீமாகப் புலனாய்வு செய்கின்றனர். டி.எஸ்.பி. ரஞ்சித் காளி...