Shadow

Tag: Pastel productions

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

முஃபாஸா: தி லயன் கிங் | ஷாருக் – ஆர்யன் – ஆப்ராம் கான்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஷாருக் கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், ஆப்ராம் கானும் முதன்முதலில் ஒன்றாக இணைந்து, டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'முஃபாஸா: தி லயன் கிங்' திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பேரி ஜென்கின்ஸின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியாவில் டிசம்பர் 20, 2024 அன்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கெளரவ பூமியின் கடைசி ராஜாவான முஃபாஸாவின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இப்படம். இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கானும், அவரது மகன்கள் ஆர்யன் கானும், அப்ராம் கானும் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள்.தி லயன் கிங் எனும் லைவ்-ஆக்ஷன் படம், 2019 இல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, ஷாருக்கான் முஃபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார். காட்டு ராஜாவைக் காணப் பார்வைய...
முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

முஃபாஸா – தி லயன் கிங் | ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள்
சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர்.இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது....