சிம்பாவிற்கும், நளாவிற்கும் பிறக்கும் சிங்கக்குட்டியான கியாராவிற்கு, கெளரவ பூமியின் அன்புக்குரிய மன்னரான முஃபாஸாவின் கதையை டிமோனும் பும்பாவும் விவரிக்க, திரைக்கதை ஃப்ளாஷ்பேக்கினில் விரிகிறது. அநாதையான முஃபாஸா தொலைந்து தனியாகத் திரியும்போது, டகா எனும் ராஜவம்சத்தைச் சேர்ந்த டகாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தில், பயங்கரமான எதிரியை நேரிட்டு, தங்கள் தலைவிதியை மனமொத்துத் தீர்மானிக்கின்றனர்.
இப்படம், இந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.