Shadow

Tag: Pattathu Arasan movie

பட்டத்து அரசன் விமர்சனம்

பட்டத்து அரசன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் அணியாக ஒரு குடும்பம், கபடி ஆட்டங்களில் பங்குபெறும் ஒற்றை வரிச்செய்தியைப் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம். தனது ஊருக்காக நாப்பது வருடங்களாகக் கபடி ஆடி, ஊருக்கு மிகப் பெரும் பெருமையைச் சேர்த்தவர் பொத்தாரி. ஊரின் கபடிக் குழுவிற்கு அவரது பெயரை வைப்பதோடு, அவருக்குச் சிலையும் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஊர்மக்கள். அரசர்குளத்திற்கு எதிரான ஒரு போட்டியில், பொத்தாரியின் பேரன் பணம் வாங்கிவிட்டதாக ஊர்மக்களை நம்ப வைக்கிறான் பொறாமையில் பொங்கும் சக ஆட்டக்காரன் ஒருவன். அதனால் சுடுகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொத்தாரியின் குடும்பத்திற்குக் காலகாலமாகக் கிடைக்கும் முதல் மரியாதை மறுக்கப்படுகிறது. ஊராரின் அலட்சியத்தையும் தூற்றுதலையும் பொறுக்காத பொத்தாரியின் இரண்டாம் தாரத்துப் பேரன், ஊர்மக்கள் ஓர் அணியாகவும், பொத்தாரி குடும்பத்து ஆண்கள் ஓர் அணியாகவும் மோதிப் பார்க்கலாம் என அறைகூவல் விடுக்க...