ரெஜினா விமர்சனம்
ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், ரெஜினாவின் கணவரும் வங்கி ஊழியருமான ஜோ கொடூரமாகக் கொல்லப்படுகிறார். ஒரே நாளில் தன் வாழ்வை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கின கொள்ளையர்களைத் தேடிச் சென்று எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் ரெஜினா படத்தின் கதை.
ரெஜினாவாக சுனைனா நடித்துள்ளார். மீனுக்காக ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு போல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்துள்ளார் சுனைனா. ரிது மந்தாராவைக் கடத்தி, நிவாஸ் ஆதித்தனை மிரட்டி தன் பழிவாங்கும் பயணத்தை நகர்த்துகிறார் சுனைனா. நண்பர்கள் உதவி செய்கின்றனர் எனக் காட்டப்பட்டாலும், சுனைனா தன் இரையை மிகச் சுலபமாக நெருங்குவது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
பவா செல்லத்துரை, டெர்மினேட்டர் அர்னால்டை நினைவுறுத்துவது போல் ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வசனம் பேசுபவராக உள்ளார். ‘ஐயோ, பாவம்’ என அவர் இரக்கப்பட்டாலும...