
விரட்டும் சூறாவளி
இயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். சூறாவளிக் காற்று சீறிப் பாய்ந்தால், அதன் விளைவிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்த மாதிரியான ஒரு புயலின் கடும் கோபம் பற்றியும் அதன் விளைவாக அங்கு வாழும் மக்கள், உயிர் தப்பிக்க, தலை தெறிக்க ஓட வேண்டிய ஒரு நிலை உருவாகுவது பற்றியும் விளக்குகிறது.
சில்வர்டன் என்பது ஓர் அழகிய, சிறு நகரம். அன்றும் என்றும் போல் பொழுது விடிகிறது. ஆனால் ஒரு வித்தியாசம். புயல் உருவாகி, பெரும் வேகத்தில், சுழன்று சுழன்று மக்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறது. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, திசை தெரியாமல் ஓட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
சீறி வரும் புயலின் தாக்கத்தை, அவர்களால் தாக்கு பிடிக்க முடிந்ததா என்பதே மீதி கதை. Into the Storm என்ற இந்தத் திரைப்படம், தம...


