“போர்(த்) தொழில்: நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது” – சரத்குமார்
அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ த்ரில்லர் படம் “போர்(த்) தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் அசோக் செல்வன், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தைத் தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக் காட்டினோம். யாராவது ட்விஸ்ட்டை உடைத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட ட்விஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோருக...