Shadow

Tag: Powder Tamil movie

பவுடர் விமர்சனம்

பவுடர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர். கொரோனாக் காலகட்டத்தில் மிக எளிமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இரவு ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்தில், ஓர் இரவில் நடக்கும் கதையாகப் படத்தை எடுத்துள்ளார். தாதா 87 படத்தில், இரண்டாம் ப...