
“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனி'யின் ட்ரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாகச் சென்றடைந்துள்ளது. புஷ்கர் - காயத்ரி அவர்களின் வால்வாட்சர் ஃப்லிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி, 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
வதந்தி தொடர், வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்தத் தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தத் தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதைக் கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ்...





