Shadow

Tag: PS2 movie

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத...