Shadow

Tag: இரகுராமன்

அக்கறை சீமையிலே – 2

அக்கறை சீமையிலே – 2

கதை, படைப்புகள்
இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன். நேரம்: 3pm நாளைக்குலாகூர்ல  இருக்கும்  இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா  ஒரு ரகசியதகவல்  வந்திருக்கு.அங்க  நம்ம  டீம்  போய்  கவர்  பண்ணினா  நல்லா இருக்கும் என்றார் Mr.வில்லியம்ஸ்.சார்  Mr. ஹுசைன்  தான் பாகிஸ்தான்ல கவர் பண்ற நம்ம  ரிபோர்ட்டர்.ஆனா அவர் இப்போ 1 வீக்  லீவ் ல இருக்காரு.சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ?Mr.இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா  நம்மகிட்ட  வொர்க் பண்றாரு.அனுபவமுள்ள ஆளு..அவர்  போறது  பெஸ்ட்னு  தோணுது சார் என்றார் ஆண்டர்சன்.சார் மன்னிக்கணும் இக்பால் ஒரு இந்தியர்,அவர இப்போ பாகிஸ்தான்  அனுபறது  நல்ல  ஐடியாவா எனக்கு தோணலை என்றார் ஹென்றி.ஆனா அவர் ஒரு முஸ்லிம் என்பத...
வெள்ளை மனசு

வெள்ளை மனசு

கதை, படைப்புகள்
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் .. வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை.. வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் அருகில் சென்றான், "எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3 மாசம் " என்றான்... இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் .. உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்.. எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார், "உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்".. அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தா...
என்ன மரியாதை! என்ன மரியாதை?

என்ன மரியாதை! என்ன மரியாதை?

கதை, படைப்புகள்
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.. உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்.இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு.. பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேலை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான். தெலுங்கான பிரச்சன...
ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

கதை, படைப்புகள்
இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.   வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.   பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வண்ணம் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.   இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.   அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.   மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.   அதை கண்டவர், ஒரே வாரத்த...