ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8
கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகானாகக் ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் (Return Of The Dragon)” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்க் என்டர்டெயின்மென்ட், ராஜ் மெலடிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
தமிழக சுயாதீன இசைத்துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ்த் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகானாக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்” எனும் பெயரில் லண்டன், மலேஷியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இ...