Shadow

Tag: Rajinikanth

லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர்யா ...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆவி...