Shadow

Tag: Ram Pothineni

தி வாரியர் விமர்சனம்

தி வாரியர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டவர் ராம். ஆனால், ராம் பொத்தினேனியாக தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இருபது வருடக் காத்திருப்புக்குப் பிறகு, தமிழில், நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம். லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது இரண்டாவது இன்னிங்ஸிற்கான தொடக்கமாக இப்படம் அமையுமென எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவரான சத்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி வருகிறார். மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரு எனும் ரெளடிக்கு எதிராகக் காவல்துறையில் புகாரளிக்கிறார் சத்யா. குரு, சத்யாவை நையப்புடைத்துத் தொங்க விட்டுவிடுகிறார். உயிர் பிழைக்கும் சத்யா, ஐபிஎஸ் அதிகாரியாக மதுரை வருகிறார். குருவின் சாம்ராஜ்ஜியம் நிர்மூலமாகிறது. கமர்ஷியல் ஃப்ளேவர்கள் இல்லாமல் படம், புஜ பல பராக்கிரமசாலியான குருவிற்கு...